போக்குவரத்து விதிமீறல் : சென்னையில் நேற்று ஒரே நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த அபராதத் தொகைகளை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டது.

இதன்படி சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,500 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்து ரூ. 15 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.