‘நவரசா’வின் முதல் உணர்வு : விஜய்சேதுபதி நடித்த எதிரி

ஆந்தாலஜி படமான ‘நவரசா’ ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்குனர் பிஜாய் நம்பியார் கருணை உணர்வை அடிப்படையாக கொண்டு எடுத்துள்ளார்.

விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக்செல்வன் கூட்டணியுடன் ‘எதிரி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

Advertisement

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், நடிகை ரேவதி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் எதிரி படத்தின் விமர்சனத்தை பாப்போம்.

ரேவதியும், பிரகாஷ் ராஜும் கணவன் – மனைவி. இவர்களின் மகன் அசோக் செல்வன். ரேவதியும், பிரகாஷ் ராஜும் கருத்து வேறுபாடு காரணமாக பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி ரேவதியின் வீட்டுக்கு வருகிறார்.

விஜய்சேதுபதியை பிரகாஷ் ராஜ் தனது அறைக்கு அழைத்து செல்கிறார். சில நிமிடங்கள் கழித்து அந்த அறையிலிருந்து சத்தம் வருகிறது. உடனே ரேவதி அங்கு சென்று பார்த்த போது பிரகாஷ் ராஜ் இறந்து கிடக்கிறார். விஜய் சேதுபதி ரேவதி வீட்டிற்கே வந்து பிரகாஷ் ராஜை கொலை செய்ய காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை

தீனா எனும் கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளார். கணவன் மனைவியாக நடித்திருக்கும் ரேவதியும், பிரகாஷ் ராஜும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அசோக் செல்வன் சிறிது நேரமே வந்தாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்திற்கு வேகம் கொடுக்கிறது. திரைக்கதையில் சற்று வேகத்தை கூட்டி இருக்கலாம்.

கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நல்ல குட்டி கதை ‘எதிரி’