வரும் ஞாயிற்றுக்கிழமை 8-வது மெகா தடுப்பூசி முகாம் : அமைச்சர் அறிவிப்பு

வரும் ஞாயிற்றுக்கிழமை (14.11.2021) 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெறும்.
“மெகா தடுப்பூசி முகாம்கள்” சம்பந்தமாகவும் மாநில அளவிலான துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனை ‘காணொளி கூட்டம்’நடைபெற்றது.
தற்போது தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 71 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்ந்துள்ளது.
