Search
Search

தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு.. நடிகர் மனோபாலா காலமானார்!

1979 ஆம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் மனோபாலா. அன்று தொடங்கி இன்று வரை சுமார் 43 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் ஒரு குணச்சித்திர நடிகராக வளம் வந்தவர்.

நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம், தயாரிப்பு என்று திரைத்துறையில் இருந்த அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்கியவர் அவர். இவர் இயக்கத்தில் முதல் முதலில் வெளியான திரைப்படம் 1982ம் ஆண்டு மணிவண்ணன் எழுத்தில் வெளியான ஆகாய கங்கை படம் தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மெகா ஹிட் படமாக மாறிய ஊர்காவலன் திரைப்படம் இவருடைய இயக்கத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை மற்றும் சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட மூன்று படங்களுக்கு இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டார்.

கடந்த சில காலமாகவே பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் முழுநேர ஓய்வு எடுத்துவந்த அவர், இன்று சென்னையில் உடல்நல குறைவு காரணமாக காலமானார், அவருக்கு வயது 59. இறுதியாக Ghosty என்ற படத்தில் இவர் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

You May Also Like