Search
Search

பிரபல நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் காலமானார்

பிரபல நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 76.
ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை தன் வீட்டில் காலமானார். ஜெயந்தி இறந்த தகவலை அவரின் மகன் கிருஷ்ண குமார் உறுதி செய்துள்ளார்.

1960ம் ஆண்டு திரையுலகிற்கு வந்த நடிகை ஜெயந்தி முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் 6 மாநில விருதுகள் வாங்கியிருக்கிறார். சுமார் 500 படங்களில் நடித்துள்ளார். ஜெமினி கணேசன், எம்ஜிஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். கன்னட நடிகர் ராஜ்குமார் உடன் சுமார் முப்பது படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

You May Also Like