ஏஜென்ட் கண்ணாயிரம் திரை விமர்சனம்

மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம், ரியா சுமன், முனீஷ்காந்த், புகழ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம்.

நகரில் நடக்கும் சிறு சிறு தவறுகளை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்வாக இருக்கும் சந்தானம், தன் பத்திரிகையாளர் நண்பனின் உதவியால் சில குற்றங்களை கண்டுபிடிக்கிறார். இதனிடையில் தன்னுடைய தாயின் மரண செய்தி அறிந்து ஊருக்கு கிளம்புகிறார். அதே நேரம் அந்த கிராமத்தில் திடீர் திடீர் என்று பல மரணங்கள் நடக்கிறது.
இதனை கண்டு பிடிக்கும் சந்தானம் எதிரியின் வலையில் சிக்குகிறார். இறுதியில் இந்த மரணங்களுக்கான யார் காரணம்? மர்ம மரணங்களை சந்தானம் எப்படி கண்டு பிடிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஏஜென்ட் கண்ணாயிரமாக நடித்திருக்கும் சந்தானம் தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் படத்தை தாங்கி பிடிக்கிறார். கதாநாயகியாக வரும் ரியாவின் நடிப்பு சிறப்பு.
முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராமதாஸ் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கலாம்.
சில ஆண்டுகளாகவே சந்தானத்தின் படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் ஏஜென்ட் கண்ணாயிரம் ஒரு கம்பேக் படமாக இருக்கும்.