Search
Search

அஜித் 61 படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’க்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், ‘ராஜதந்திரம்’ வீரா, மகாநதி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். சில நாள்களாக அஜித்-61 படத்தின் டைட்டில் இதுதான் என சமூக வலைதளங்களில் ‘துணிவே துணை’ என்ற பெயர் வைரலாகி கொண்டிருந்தது. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியானதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

You May Also Like