Search
Search

“விடாமுயற்சி” விஸ்வரூப வெற்றி.. வெளியானது AK 62 டைட்டில் – Happy Birthday தல!

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது ஒரு ஒப்பற்ற நடிகனின் பயணம், இவரை நடிகன் என்று குறிப்பிடுவதை தாண்டி மிகச்சிறந்த உள்ளம் கொண்ட ஒரு சிறந்த மனிதர் என்று குறிப்பிட்டால் நிச்சயம் அது மிகையல்ல.

இன்று, உழைப்பாளர்களை நாம் கொண்டாடும் தினத்தில் பிறந்து உழைப்புக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் அஜித் குமார் அவர்களுக்கு Tamil Xp சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 1993ம் ஆண்டு இயக்குநர் செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியில் கதையின் நாயகனாக அறிமுகமானவர் இவர்.

தொடக்கத்தில் சில சறுக்கல் இருந்தாலும் ஆசை, வான்மதி, கல்லூரி வாசல் மற்றும் காதல் கோட்டை என்று பல சிறந்த படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்திய ஒரு ஒப்பற்ற நாயகன் அஜித் குமார். இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்துவரும் இவர் தனது அகவை 52ல் கால் எடுத்து வைத்த நேரத்தில் இவருடைய 62வது திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

“விடாமுயற்சி” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை பிரபல லைக்கா நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கி வருகிறார். ஏப்ரல் 2024ல் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

You May Also Like