உலகத்தின் முதல் டிரில்லினியர் யார் தெரியுமா?

இது வரை, பிரபல பத்திரிக்கைகள் டாப் பணக்காரர்களின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அந்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு பில்லியன் டாலர்களில் தான் இருக்கும். ஆனால் இது வரை டிரில்லினியர் யாரும் வந்ததில்லை.

ஆனால், வரலாற்றில் முதன் முதலாக Amazon நிறுவனர், Jeff Bezos முதலாவது டிரில்லியினராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால், அவரது தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 143 பில்லியன் டாலராகும். இவர், கொரோனா காலத்தில் கிட்டத்தட்ட 34 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார். ஒரு கருத்துகணிப்பின் படி, 2026-ல் இவர் உலகின் முதல் டிரில்லியினராக இருப்பார் என்று கூறுகிறது.

ஒரு பக்கம், இவரது சொத்து மதிப்பு வளர்ந்தாலும், இவரது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. ஆனால், நிறுவனத்தின் தரப்பில் ஊழியர்களின் பாதுகாப்பிற்க்காக 800 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.