சீத்தாப்பழங்களில் உள்ள மருத்துவ பலன்கள்

சீத்தாப்பழங்களின் சுவை மற்ற பழங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. சுவை மட்டுமல்ல அதில் உள்ள சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

சீத்தாப்பழத்தில் வைட்டமின்கள், புரதம், தாது பொருட்கள், இனிப்பு, கொழுப்பு சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்டது. உடலுக்கு பாதிப்பை தரக்கூடிய நச்சுக் கிருமிகளை இது உடனே வெளியேற்றும்.

சீத்தாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

Advertisement

இரவில் ஒரு சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். இதற்கு காரணம் இதில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள் தான். இவை இரண்டும் மன அழுத்தத்தை சரிபடுத்தும்.

சீத்தாப்பழத்தில் உள்ள தாதுப் பொருட்கள் நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இருதயத்திற்கும் வலுவூட்டும்.

உடலில் தேவையற்ற சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழம் சாப்பிட்டு வர, தேவையற்ற சதைகள் கனிசமாக குறையும்.

seethapalam benefits tamil

உஷ்ணத்தால் ஏற்படும் மந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு. சீத்தாப்பழம் ரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும். இப்பழத்தில் குளுக்கோஸ் கனிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.

சீத்தாப்பழத்துடன், சிறிது இஞ்சி சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் மொத்தமாக விலகும். நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு.

அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படுபவர்கள், சீத்தாப்பழம் தின்று வர, தசைகளை சீராக இயங்கச் செய்யும். சரும வறட்சி உள்ளவர்கள் சீத்தாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும்.

சீத்தாப்பழத்தில் கனிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால், சளியை தடுக்கும். சளிப்பிடித்தவர்கள், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் சளி குணமாகும்.

சீத்தாப்பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும்.

சீத்தாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

சீத்தாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மையாக அரைத்து, தேமல் மீது பூசி வர,

தேமல் மறையும். சீதாப் பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும். சிலர் அதிக அளவு டீ, காபி சாப்பிடுபவர்கள். இவற்றினால் உடலில் பாதிப்பு ஏற்படாமலிருக்க பொட்டாசியம் சத்து அன்றாடம் தேவைப்படுகிறது. இந்த சத்தினை பெற சீத்தாப்பழத்தை சாப்பிடலாம்.

இப்பழத்தை ஜாம் ஜெல்லி மற்றும் ஐஸ்கிரீம் பழரசங்கள் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் அணைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.