Search
Search

திராட்சையில் உள்ள மருத்துவ குணங்கள்

grapes benefits in tamil

திராட்சையில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது.

ஜீரண கோளாறு இருப்பவர்கள் திராட்சை பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வுகிடைக்கும்.

பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சை பழத்தை சாப்பிட வேண்டும். அது நன்றாக பசியை தூண்டிவிடும். மேலும் குடல் கோளாறுகளை சரி செய்யும்.

திராட்சைபழ சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர நாவறட்சி நீங்கும்

உலர்ந்ததிராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்துபருகினால் மயக்கம் குணமாகும்.

பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும், உடல் அசதிக்கும் திராட்சை நல்ல பலனை கொடுக்கும்.
 
தூக்கம் இல்லாமல் அவதிப்படுவோருக்கு திராட்சை அருமையான மருந்து.

இரத்த சோகை, மலசிக்கல், சிறுநீரககோளாறு, அஜீரண கோளாறுகளை சரிசெய்யும் சக்தி திராட்சை பழத்திற்கு உண்டு.

grapes benefits in tamil

திராட்சைபழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கும், இரத்தம் தூய்மை பெரும், இதயம், கல்லீரல், மூளை , நரம்புகள் வலுப்பெறும்.
 
திராட்சைபழத்தை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும். உடல்எடையும் கணிசமாக அதிகரிக்கும். எனவேமெலிந்த  உள்ளவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடலாம்.

திராட்சை பழத்தின் தீமைகள்

திராட்சையில் சாலிசிலிக் எனும் அமிலம் உள்ளதால் இதனை அதிகம் சாப்பிடும் போது செரிமான பிரச்சனைகள், வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

திராட்சையில் கலோரிகள் அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால் அதிக அளவிலான கலோரிகள் உடம்பில் சேரும்.

கர்ப்பிணி பெண்கள் திராட்சை பழம் சாப்பிடுவதால் அதில் உள்ள ரெஸ்வெராட்ரோல் அமிலத்தால் கருப்பையில் உள்ள குழந்தைக்குப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே கர்ப்பிணி பெண்கள் திராட்சை பழம் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கொள்ள வேண்டும்.

மேலும் அனைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.

Leave a Reply

You May Also Like