கமலுடன் 35 ஆண்டுகள் கழித்து இணையும் மணிரத்னம் – “அவரும்” ஒரு ரோலில் வருகிறாரா?

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, நடனம் இன்னும் எத்தனை துறைகள் சினிமாவில் உள்ளதோ, அது அத்தனைக்கும் பரிச்சயமானவர் தான் நம்மவர், உலக நாயகன் கமலஹாசன். அவருடைய நடிப்பில் கடந்த 1987ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நாயகன்.
மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான ஒரு மாபெரும் திரைப்படம் என்றே கூறலாம். கமலஹாசனுடைய திரை வரலாற்றில் அவருக்கு மைல் கல்லாக அமைந்த திரைப்படங்கள் பல உள்ளது என்றாலும், அதில் நாயகன் படத்துக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இன்றளவும் இருக்கிறது.
இந்நிலையில் சுமார் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமலஹாசனின் 234வது திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மணிரத்தினம் அடுத்து இயக்க உள்ள திரைப்படம் அந்த திரைப்படம் தான்.
இந்நிலையில் பிரபல YouTube சேனலான “வலைப்பேச்சில்” இந்த படத்தில் பிரபல நடிகர் சிலம்பரசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளனர். தற்போது சிம்புவின் 48வது திரைப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.