தினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..!

தென்கொரியாவில் உள்ள ஈவா பெண்கள் பல்கலைக்கழகம், 1,61,286 பேரைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தியது அதில், தினமும் முறைக்கு மேல் பல்துலக்கினால் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதய செயலிழப்பு உள்ளிட்ட அபாயங்களைக் குறைக்க வழிவகை உள்ளது என தெரியவந்துள்ளது.

ஆய்வில் கலந்துகொண்ட அனைவரும் 40 முதல் 79 வயதுக்கு உட்பட்டவர்கள் அவர்கள் தங்கள் பற்களை எந்த அளவுக்கு தூய்மையாக பராமரிக்கிறார்கள், வாய் சுகாதாரம் பற்றி எந்த அளவுக்கு விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன,

கடந்த பத்து வருடங்களாக அவர்களை பரிசோதனை செய்து வந்ததில், முறையாக பல் துலக்காதவர்களில் 4,911 பேருக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் 7,971 பேர் இதய செயலிழப்பு பாதிப்பையும் எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம், பல் துலக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தியவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

தினமும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பல் துலக்குபவர்களுக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஏற்படுவதற்கான அபாயம் 10% குறைவாக இருக்கிறது என்றும், இதய செயலிழப்புக்கான அபாயம் 12% குறைவாக உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்காக, உடனே தினமும் மூன்று முறை பிரஷ் வைத்து, கரகரவென பற்களை தேய்த்துவிடாதீர்கள். பற்களில் உள்ள எனாமல் காணாமலே போய்விடும்.

தினமும் ஒரு முறை மட்டுமே பல் துலக்க பிரஷ் பயன்படுத்தலாம். மற்ற தடவையெல்லாம் வெறும் விரல்களாலேயே துலக்கலாம். அல்லது ஆலங்குச்சி, வேப்பங்குச்சியைப் பயன்படுத்தலாம். அதேபோல் ஒருமுறை மட்டுமே பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். மற்ற தடவைகளில் கரி உப்பு, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் மூலிகை பற்பொடிகளை வாங்கி, அதை உபயோகித்து, பற்களை துவக்கலாம்.

Recent Post