மாரிதாஸ் கைது : பாஜகவினர் 50 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

யூ-டியூபர் மாரிதாஸ் மதுரையில் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். YouTube தளத்தில் பாஜகவிற்கு ஆதரவாகவும் திமுகவிற்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பி வருபவர் மாரிதாஸ்.
இவர் முப்படைகளின் தலைமைத் தளபதியின் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தை காஷ்மீருடன் இணைத்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டார். அதேபோல முதுகுளத்தூர் மணிகண்டன் மரணத்திற்கும் தமிழக அரசை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டார்.

இதன் காரணமாக யூ-டியூபர் மாரிதாஸ் மதுரையில் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யும் போது பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பாஜகவின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 50 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பாலை தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இவ்வழக்குகள் பதிவாகியுள்ளது.