சக்கராசனம் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன?

சக்கராசனம் (Chakrasana) என்பது உடலை சக்கரம் போல் வளைத்துக் காட்டும் ஒரு ஆசனப்பயிற்சி என்பதால் இதற்கு சக்கராசனம் என்று பெயர்.

பிரையாசனம் சிறிது நாள் செய்த பிறகு இவ்வாசனத்தை செய்ய முயற்சிக்க வேண்டும்.

சக்கராசனம் செய்வது எப்படி?

Advertisement

முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். படுத்தபடியே இடுப்பு வயிற்றுப்பகுதியை மேலே தூக்கி உயர்த்த வேண்டும். உயர்த்தும்போது கைகளை பின்புறமாக கொண்டு சென்று உள்ளங்கை தரை மீது படும்படி வைக்க வேண்டும். பின்னர், இயல்பாக ஐந்து மூச்சுக்கள் விட்ட பிறகு மெதுவாக மீண்டும் முன்நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை நின்று கொண்டும் செய்யலாம். படுத்துக்கொண்டும் செய்யலாம்.

chakrasana-steps-in-tamil

நன்மைகள் என்ன?

  • அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி ஏற்படும்.
  • வயிற்று தசைகள் நன்கு வலிமை அடையும்.
  • முதுகு எலும்புகளைப் பலப்படுத்துவதுடன் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
  • நீண்ட நேரம் மேசையில் அமர்ந்து கணினி பயன்படுத்துவோர்களுக்கு மன அழுத்தம், கோபம் மற்றும் கூன் முதுகு வராமல் தடுக்கும்.
  • சலபாசனம், புஜங்காசனம், தனுராசனம் ஆசனங்களின் பலன் இதில் கிடைக்கும்.

மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.