75 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராஸில் வெளியான திரைப்படம்.. கூட்டம் கூட்டமான குவிந்த ரசிகர்கள் – வெளியான ஒரு சூப்பர் கிளிக்

1918ம் ஆண்டு தான் முதல் தமிழ் வெளியானதாக ஆய்வுகள் கூறுகின்றது, சுமார் 100 ஆண்டுகளை கடந்து பயணிக்கும் இந்த தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ ஆயிரம் படங்கள் வெளியாகி வெள்ளிவிழா கண்டுள்ளது.
ஆனால் இன்னும் பலகோடி படங்கள் வெளியானாலும் அந்த ஒரு படத்திற்கு இணையாகாது என்றே கூறலாம். அப்படிப்பட்ட ஒரு படம் தான் சந்திரலேகா. ஏப்ரல் 9ம் தேதி 1948ம் ஆண்டு இந்த படம் வெளியானது. ஜெமினி எஸ். எஸ் வாசன் அய்யாவின் படமது.
படம் முழுக்க பிரமாண்டம், குறிப்பாக அந்த முரசாட்டம், படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகள், அவ்வப்போது வரும் சர்க்கஸ் காட்சிகள் என்று எல்லாமே பிரமாண்டம். குறிப்பாக ரஞ்சன் என்ற மாபெரும் நடிகர் சசாங்கன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பர், அப்பப்பா என்ன நடிப்பு. இவ்வளவு காலமாகியும் இந்த படத்தின் மீதான தாக்கம் இன்றளவும் குறையவில்லை.
இந்நிலையில் அந்த படம் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் 1948ம் ஆண்டு வெளியானபோது, ப்ராட்வே பகுதியில் உள்ள பிரபாத் திரையரங்கின் முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நின்றுகொண்டிருந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் GM குமார் அவர்கள்.