சென்னை மாநகராட்சி : மழையால் எதும் பிரச்சினையா? இதோ மாநகராட்சி தொடர்பு எண்கள்!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நேற்று இரவு முதல் சென்னையில் விடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. நகரின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கி நிற்பது, மரம் முறிந்து விழுதல், மின்வெட்டு பிரச்சினை, மின் கசிவு, கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல், குடிநீருடன் கழிவுநீர் கலப்பது உள்ளிட்டவை தொடர்பான புகார்களுக்கு பிரத்யேக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் “நம்ம சென்னை” மொபைல் செயலி மூலமும் மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
புகார்களுக்கு பிரத்யேக தொடர்பு எண்கள்
1913
044 – 25619206
044 – 25619207
044 – 25619208