Search
Search

தொந்தியை முற்றிலுமாக குறைக்கும் தனுராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன

thoppai kuraiya yoga

இந்த ஆசனத்தில் கைகள் நாண் கயிறாகவும், உடல் வில்லாகவும் தோற்றம் தருவதால் தனுராசனம் எனப்படுகிறது. வளையாமல், நெளியாமல் நிமிர்ந்து இருக்க முதுகுத் தண்டையும், முதுகையும் பலப்படுத்தும் ஆசனம்.    

தனுராசனம் செய்முறை:   தரைவிரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும், பின்னர் இரு கால்களையும் மடக்கி உயர்த்தி கால்களை நன்கு அகற்றி கொள்ள வேண்டும்.   அதன்பின் இரு கைகளையும் பின்புறமாக கொண்டு சென்று இருக்கால்களையும் பிடித்துக் கொள்ளவும்.

thoppai kuraiya yoga

சுவாசத்தை மெதுவாக விட்டவாறு தலை, கழுத்து, மார்பு ஆகியவைகளை மேலே தூக்க வேண்டும்.   வயிற்றுப் பகுதி மட்டும் கம்பளத்தில் அழுந்தியிருக்கும். இதுவே ஆசன நிலையாகும். உடலானது வில் போன்று வளைந்து காணப்படும் இதுவே தனுராசனம் என்ப்படும்.  

ஆரம்ப நிலையில் ஆறு வினாடிகள் இருந்து படிப்படியாக வினாடிகளை அதிகரித்து கொள்ளாலாம். குறிப்பிட்ட நேரம் ஆசன நிலையில் இருந்தபின் சுவாசத்தை மெதுவாக இழுத்துக் கொண்டே உடலைத் தாழ்த்தி கைகளின் பிடிப்பிலிருந்து கால்களை விடுவித்து குப்புறப்படுக்கும் நிலைக்கு வரவும். தனுராசனம் முற்றுப் பெற்றதும் உடலை முன்னும், பின்னும் பக்கவாடடிலும் ஆட்டினால ஜிரணசக்தி அதிகரிக்கும்.  

தனுராசனம் பலன்கள்

  • வயிற்றுக் கோளாறுகளை போக்கும்
  • தொந்தி முற்றிலுமாக குறையும்
  • கை, கால்கள் வளர்ச்சி காணும்
  • உடல் உறுதி பெறும்
  • உடல் அழகை கூட்டும்
  • முகம் வசீகரம் பெறும்

மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

You May Also Like