மூன்று ஆண்டுகள் கழித்து களமிறங்கும் அனுஷ்கா.. கைகோர்க்கும் நடிகர் தனுஷ்!

சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகை தான் அனுஷ்கா. ஒரே ஆண்டில் ஐந்து தெலுங்கு படங்களில் நடித்த இவர் 2006ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு என்ற திரைப்படத்தில் தமிழில் முதல் முதலாக கதையின் நாயகியாக தோன்றினார்.
அதன் பிறகும் பல தெலுங்கு படங்களில் நடித்த நிலையில் இவருக்கு தமிழில் பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது நிச்சயம் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் என்றே கூறலாம். அதன்பிறகு சிங்கம், தெய்வத்திருமகள், சகுனி, அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா மற்றும் என்னை அறிந்தால் என்று தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான சைலன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு இதுவரை எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா செட்டி தற்பொழுது Miss ஷெட்டி Mr. பாலிஷெட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதில் கூடுதல் சிறப்பாக இந்த படத்தில் பிரபல நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு பாடலை தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் பாடியுள்ளார். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.