தனுஷின் ‘D44’ படத்தின் புதிய அப்டேட்

தனுஷின் 3வது திரைப்படமான ’மாறன்’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.

இந்த நிலையில் தனுஷின் 44வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. இந்த படத்தை மித்ரன் ஜவகர் இயக்குகிறார். தனுஷ் நடிக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானிசங்கர் என இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளனர்.

cinema news in tamil

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் மற்றும் அனிருத் மீண்டும் இணைகிறார்கள்.

Advertisement

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுதிரன் ஆகிய மூன்று படங்கள் வெளிவந்தன. இந்நிலையில் தற்போது நான்காவது படம் தயாராகி வருகிறது.