நாம் தமிழர் கட்சியினர் மீது ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பேருந்து நிலையம் வளாகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியினர் அதிமுக, திமுக முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இந்நிலையில் அப்பகுதியில் இருந்த திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் என்பவர் மேடையில் ஏறி மைக் பிடித்து கீழே தள்ளிவிட்டார். கூட்டத்தில் வைக்கப்பட்ட நாற்காலிகளை உடைத்து எறித்தனர். பிறகு திமுகவினர் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடையே ரகளை ஏற்பட்டது.
இதனால் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியினர் மீது ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்#தருமபுரி #மொரப்பூர் #naamtamilarkatchi #dmk pic.twitter.com/NB01A3742p
— Tamilxp (@tamilxp) December 22, 2021