Search
Search

“என்னோட அடுத்த டார்கெட் நீங்கதான் துருவ்” – “அந்த” இயக்குநரின் அடுத்த மூவ்!

துருவ் விக்ரம், தந்தையை போலவே ஒரு நல்ல நடிகர். தான் ஏற்கும் கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியாக தேர்ந்துதெடுத்து நடித்து வருகின்றார் என்று தான் கூறவேண்டும். தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார் துருவ்.

இந்நிலையில் இவருடைய அடுத்த படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றது. நடிகர் கவின் மற்றும் நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் தான் டாடா. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் கணேஷ் கே பாபு.

டாடா படம் வெளியான நாள் முதல், இயக்குநர் கணேஷ் படத்தில் கையாண்ட பல விஷயங்களை இன்றளவும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். குறிப்பாக கவினின் நண்பராக நடித்தவரின் கதையமைப்பும் அவருக்கு கொடுக்கப்பட்ட வசனங்களும் திரையரங்குகளில் பல இடங்களில் கிளாப்ஸ் வாங்கியது.

ஒரு “பீல் குட்” வெற்றிப்படத்தை கொடுத்த கணேஷ் கே பாபு தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. துருவ் விக்ரம் தான் தனது அடுத்த டார்கெட் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

துருவ் நடித்து வரும் மாரி செல்வராஜ் படம் முடிந்தவுடன், இந்த பட வேலைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like