காசோலை மோசடி வழக்கு.. இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை உறுதி!

பிரபல இயக்குனர் லிங்குசாமி அவர்கள் பிவிபி கேப்பிட்டல் தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்த 35 லட்சம் மதிப்புள்ள காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிய நிலையில், காசோலை மோசடி வழக்கு அவர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
கடந்த 2014ம் ஆண்டு நடிகர் கார்த்தி மற்றும் சமந்தா நடிப்பில் வெளியவிருந்த “எண்ணி ஏழு நாள்” படத்தை தயாரிக்க மேற்கூறிய அந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து சுமார் ஒரு கோடி 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம் கடனாக பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைவர் இயக்குனர் லிங்குசாமி என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் இந்த கடனுக்காக அவர் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்த நிலையில் அப்பொழுது அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை தற்பொழுது உறுதி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே சைதாப்பேட்டை நீதிமன்றம் வழங்கிய ஆறு மாத சிறை தண்டனையை எதிர்த்து லிங்குசாமி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.