காது வலி குணமாக வீட்டு மருத்துவம்

தேங்காய் எண்ணெயில் பெருங்காயம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி கொண்டபின் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி சற்று சூடாக இருக்கும்போது காதுகளில் ஒரு சில துளிகள் விடவும்.

கற்பூரத்தை காய்ச்சி அதன் சில துளிகளை காதுகளில் விடவும். அந்த கற்பூரத்தை காலடியில் கழுத்துப் பகுதிகளில் நன்கு சூடு பறக்கத் தேய்த்து விட காது வலி குணமாகும்.

புத்தம் புதிய ஒரு சில வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து ஒரு சில துளிகள் வலியுள்ள காதுகளில் விட்டால் காதுவலி குறையும்.

Advertisement

எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து வடிகட்டி ஓரிரு சொட்டு காதில் விட வேண்டும்.

அருவி கடல் போன்ற பகுதிகளில் குளிக்கும்போது காதுகளில் நீர் புகாத வண்ணம் பார்த்துக் கொள்வது அவசியம். ஒலி அதிகமுள்ள இடங்களில் அதிக நேரம் இருக்காமலும் பார்த்துக் கொள்ளலாம்.