சாய் பல்லவி நடித்துள்ள ‘கார்கி’ – திரை விமர்சனம்
சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கார்கி. இந்தப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது.

நான்கு வடமாநில இளைஞர்கள் ஒன்பது வயது குழந்தையை கற்பழித்து விடுகின்றனர். அந்த வழக்கில் பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் தந்தை கைது செய்யப்படுகிறார். இதனால் உளைச்சல்களுக்கு ஆளாகிறது.
சட்ட போராட்டங்களின் மூலம் தனது அப்பாவை மகள் காப்பாற்றினாரா? இறுதியில் அவருக்கு என்ன ஆனது என்பதே கார்கி படத்தின் கதை.
பள்ளி ஆசிரியராக நடித்துள்ள சாய்பல்லவி துளியும் மேக்அப் இல்லாமல் மிகவும் எதார்த்தமான, எளிமையான, பெண்ணாக நடித்துள்ளார். காளி வெங்கட் இப்படத்தில் வழக்கறிஞராக வந்து தன்னுடைய நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களான ஆர் எஸ் சிவாஜி,சரவணன், ஜெயபிரகாஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று சரியான நடிப்பை கொடுத்துள்ளனர்.
திருநங்கைகள் நீதிபதியாக வந்தாலும் அவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது. தவறான வழக்கில் கைது செய்யபடும் ஒருவர் சந்திக்கும் இன்னல்கள் என்ன? அவர்களை இன்றைய மீடியா எவ்வாறு சித்தரிக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக படத்தில் பதிவு செய்துள்ளனர்.
மொத்தத்தில் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் நிச்சயமாக பார்க்க வேண்டிய படம் ‘கார்கி’.
