இது ஒரு Multiverse கதைக்களம்?.. முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ் – ஜி.வி. பிரகாஷ் இன் “அடியே”

பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக்ன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் தான் அடியே. பிரபல நடிகர் ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தின் நாயகனாக களமிறங்கியுள்ளார். விக்னேஷ் கார்த்திக் “திட்டம் இரண்டு” என்ற படத்தை ஏற்கனவே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியாகியுள்ள காணொளியை பார்க்கும்போது இந்த படம் ஒரு Multiverse படமாக இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. Multiverse, அதாவது ஒரு கதாபாத்திரம் வேறுஒரு பரிமாணத்தில் எப்படி இருந்திருப்பார்கள் என்பது தான் கதையின் அம்சம்.
உதாரணமாக சீமான் அவர்கள் தற்போது இந்திய அரசியலில் இருந்து வரும் நிலையில், அவர் இலங்கை பிரதமராக இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான். ஆனால் இது கதையின் கருவே அன்றி, இதுவே கதை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாக Universe மற்றும் Multiverse என்று பலதரப்பட்ட கதை அம்சங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.