இங்கிலாந்து வீரரை மிரட்டிய ஹர்திக் பாண்ட்யா..! வைரல் வீடியோ

இந்தியா-இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியின் போது ஏற் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனுக்கும், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்ப்பட்டது.

போட்டியின் 46-வது ஓவரை இங்கிலாந்து இளம்வீரர் சாம் கர்ரன் வீசினார். அந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவும், ரிஷப் பந்த அதிக ரன்கள் எடுத்தனர், இதனால் சாம் கர்ரன் சற்றும் கோபம் அடைந்தார்.

இதனை அடுத்து அவர் வீசிய கடைசி பந்தை ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டார். அந்த பால் டாட் பாலாக அமைந்தது. உடனே ஹர்திக் பாண்ட்யாவைப் பார்த்து சாம் கர்ரன் ஏதோ முணுமுணுத்தார் முறைத்துள்ளார். இதைப் பார்த்துக் கோபமடைந்த ஹர்திக் பாண்ட்யா வேகமாக ஓடி வந்து சாம் கர்ரனை திட்டினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே களத்தில் இருந்த அம்பயர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.