ஹாஸ்டல் திரை விமர்சனம்

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஹாஸ்டல்’. போபோ சாஷி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் 2015ல் வெளிவந்த வெற்றிப் படமான ‘அடி கப்பியாரே கூட்டமணி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘ஹாஸ்டல்’.

hostel movie review

அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். ஆண்கள் ஹாஸ்டலில் நாயகி பிரியா பவானி சங்கர் இரவோடு இரவாக நுழைகிறார். ஹாஸ்டலுக்குள் சென்ற பிரியா பவானி சங்கர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொள்கிறார். அவரை யார் கண்ணிலும் படாமல் வெளியே அனுப்ப அசோக் செல்வன் முயற்சி செய்கிறார்.

Advertisement

இறுதியில் ஹாஸ்டலில் இருந்து பிரியா பவானி சங்கர் வெளியேறினாரா? பிரியா பவானி சங்கர் ஹாஸ்டலுக்குள் செல்ல காரணம் என்ன? என்பதே ஹாஸ்டல் படத்தின் மொத்த கதை.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வன் இந்த முறை தவறாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

அசோக் செல்வன் நண்பர்களாக வரும் சதீஷ், கேபிஒய் யோகி, கிரிஷ் குமார் ஆகியோர் கடமைக்கு வந்து சென்றுள்ளனர். நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் காமெடி பெரியதாக எடுபடவில்லை. முனீஸ்காந்த் மற்றும் ரவிமரியாவின் காமெடி காட்சிகள் சில இடங்களில் சிரிக்க வைத்துள்ளனர்.

போபோ சாஷியின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ஹாஸ்டல் – சொதப்பல்