மனிதனுக்கும் சரி, அவன் வளர்க்கும் செல்ல நாய்க்கும் சரி, நோய் ஏற்படாமல் இருப்பதில்லை. ஏதோ ஒரு சில காரணங்களால் நோய் ஏற்படுவதுண்டு. ஆனாலும் கிட்டத்தட்ட எல்லா நோய்களையும் ஓரளவு தடுத்திட முடியும்.
ஆரோக்கியமான உணவு, தோற்று நோய்களுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற செயல்களால் நாய்களுக்கு நோய் வராமல் தடுக்கலாம்.
அளவுக்கு மீறி உணவு அளித்தல் அல்லது தேவைக்கும் குறைவாக உணவு அளித்தல், கெட்டுப்போன உணவு, சரியாக வேகவைக்காத இறைச்சி போன்றவற்றால் நோய் ஏற்படுகிறது.
நாயை வாரத்திற்கு ஒருமுறை குளிப்பாட்டி, ஈரத்தை துடைக்கவேண்டும். சிறிதளவாவது உடற்பயிற்சி தரவேண்டும்.
வெறிநோய் (Rabies disease) இது ஒரு வைரஸ் நோய், வெறிநோயுள்ள நாய் மனிதன் உட்பட யாரைக் கடித்தாலும் அவர்களுக்கு இந்த நோய் பரவும். நோய் ஏற்பட்டால் உடனே சிகிச்சை செய்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விடுவார்கள்.
வலிப்பு நோய் (Distemper disease)
இது நாயின் நரம்பு மண்டலத்தை தாக்கி நாயை சரியாக இயங்கவிடாது.
கொரானா என்ற நாயை தொற்றும் வைரஸ் நோய் வாந்தியும் வயிற்றுப்போக்கும் இருக்கும். ரத்தமும் மலத்தோடு வெளியேறும்.
இவ்வாறான தொற்று நோய் பாதிப்புகளிலிருந்து காக்க, நாய்க்குட்டப் பருவத்திலிருந்தே தடுப்பூசிகளை அதன் வயதான காலம் வரை போட வேண்டும்.