தேவையில்லாத முடிகள் இருக்கா..? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!

தேவையில்லாத முடிகளை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எப்படி நீக்குவது என்பது பற்றி இந்த கட்டூரையில் பார்க்கலாம்.

ஒரு சிலருக்கு, கை மற்றும் கால்களில் முடிகள் இருப்பது அவ்வளவாக பிடிக்காது. அவர்கள் அந்த முடிகளை பிளேடு அல்லது ட்ரிம்மர் மூலம் நீக்குவதற்கு நினைப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்வதால், சில நேரங்களில் காயங்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால், வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டே அவற்றை நீக்கலாம்.

இதோ உங்களுக்கான டிப்ஸ்:-

1. சர்க்கரை

2. ஓட்ஸ்

3. உருளைக்கிழங்கு சாறு

4. முட்டை

சர்க்கரை:-

சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக காய்ச்சுங்கள். பிறகு அந்த கலவை, கெட்டியாக பசை போன்று மாறிவிடும். பிறகு அதனை எடுத்து, முடியுள்ள பகுதியில் தடவுங்கள். சிறிது நேரத்திற்கு பிறகு, முடி வளரும் எதிர் திசையை நோக்கி நீக்க முயற்சி செய்யுங்கள்.

ஓட்ஸ்:-

ஓட்ஸ் மற்றும் பழுத்த பலம் ஏதோனும் கிடைத்தால் அவற்றை ஒன்றாக போட்டு நன்றாக கழுக்குங்கள். இரண்டும் ஒரே கலவையாக மாறிய பின்னர், அதனை முடி இருக்கும் இடத்தில் தடவுங்கள். 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். பிறகு, நீரில் அந்த இடத்தை கழுவி விடுங்கள்.

உருளைக்கிழங்கு சாறு:-

உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு, தேன் ஆகிய 3 பொருட்களையும் ஒன்றாக போட்டு, கலக்கி எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு, முடியுள்ள இடத்தில் தடவினால், முடி நீங்கி விடும்.

முட்டை:-

முட்டை மற்றும் சோள மாவை கலந்து தேவையற்ற முடிகள் இருக்கும் இடத்தில் தடவி காய்ந்ததும் எடுத்தால் வந்துவிடும்.

Recent Post