Search
Search

இந்தியன் 2 படப்பிடிப்பு : Taipeiக்கு குட் பை சொன்ன சங்கர் – வெளியான சுவாரசிய அப்டேட்!

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் சுஜாதா அவர்களுடைய எழுத்தில் ஏ.எம். ரத்தினம் தயாரிக்க ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியாகி உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் தான் இந்தியன்.

அன்று முதலிலேயே கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பல தடைகளை கடந்து தற்போது இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது.

லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா இந்த படத்தை தயாரிக்க, சங்கர் இந்த படத்தை தற்பொழுது இயக்கி வருகிறார். ரகுமான் அவர்கள் இசையமைக்க வெகு ஜோராக இந்த படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் சங்கர் அவர்கள் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், இந்தியன் 2 படப்பிடிப்பு Taipei நாட்டில் நடந்து முடிந்துள்ளது என்றும். படத்தின் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

You May Also Like