வைரஸ் பாதிப்பின் காரணமாக பலர் தங்களது வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவை சேர்ந்த நிதி நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம், இந்த இரண்டு மாதங்களில் அமெரிக்க கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த காலத்தில, அதிக பலன் பெற்றது அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் மற்றும் ஃபேஸ்புக்கின் மார்க் ஜூக்கர்பர்க் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 600-க்கும் மேற்ப்பட்ட அமெரிக்க கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு சுமார் 30 சதவீதம் உயர்ந்து, அது ரூ. 11.21 லட்சம் கோடியாக இருக்கிறது. இதேபோல் மார்க் ஜூக்கர்பர்க் சொத்து மதிப்பு 45 சதவீதம் உயர்ந்து அது 6.07 லட்சம் கோடியாக இருக்கிறது.
பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரது சொத்து மதிப்பு முறையே 8.2 சதவீதம் மற்றும் 0.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.