க/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்
கணவர் பெயர் ரணசிங்கம் என்பதை சுருக்கி ‘க/ பெ ரணசிங்கம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் ரங்கராஜ் பாண்டே ஒரு அரசு அதிகாரியாக தோன்றுகிறார்.
வேலைக்காக வெளிநாடு செல்பவர்களின் துயரங்களையும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் கொடூரமான சிக்கலயும் இந்த படம் எடுத்து காட்டுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் ரணசிங்கம் (விஜய் சேதுபதி), தனது கிராமத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் தானாக முன் வந்து நின்று குரல் கொடுப்பவர். அரியநாச்சியை (ஐஸ்வர்யா ராஜேஷ்) திருமண செய்த பிறகு வேலைக்காக துபாய் செல்கிறார் விஜய் சேதுபதி.
துபாய்க்கு சென்று பல விதமான பிரச்சனைகளை சந்திக்கிறார் விஜய் சேதுபதி. பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் விஜய் சேதுபதி ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்தும் போராட்டம்தான் படம்.
விஜய் சேதுபதி OTT யில் வெளிவந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உதவும் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே, அருண்ராஜா காமராஜ், ஜி.வி. பவானி, ஆகியோர் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இடையிலான காதல் காட்சிகள், திருமண வாழ்க்கை ஆகியவை ரசிக்கவைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. ரணசிங்கம் மக்களுக்காக நடத்தும் போராட்டங்கள் விரிவாகக் காட்டப்படுகின்றன.
படம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் வரை செல்கிறது. பல காட்சிகள் தேவையில்லாத நீளத்துடன் இருக்கின்றன. படத்தின் ரன்னிங் டைம் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் க/ பெ ரணசிங்கம் சமூக அக்கறை கொண்ட தரமான திரைக்கதை.
