Search
Search

உலக நாயகன் கமல், தனுஷ் மற்றும் நெல்சன் – இந்த காம்பினேஷன் உருவாக அதிக வாய்ப்பு!

மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த திரைப்படத்தை உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தேசிங்கு இயக்கத்தில் சிம்புவின் 48வது படமும் ராஜ்கமல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த திரைப்படம் ஒன்று குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போதைக்கு அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தனது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ் அதன் பிறகு அவரே இயக்க உள்ள தனது ஐம்பதாவது படத்தில் நடிக்க உள்ளார்.

அதேசமயம் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி, தற்பொழுது சூப்பர் ஸ்டார் அவர்களை இயக்கி வருகிற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படம் விரைவில் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஏற்கனவே தனுஷ் மற்றும் நெல்சன் காம்போ உறுதியான நிலையில் அந்த படத்தை ராஜ் கமல் தயாரிக்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like