கொடைக்கானலில் உருவாகும் கங்குவா.. தம்பி “டில்லி” கொடுத்த ரகசிய தகவல்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்னும் 7 நாட்களில் வெளியாக உள்ளது, சென்ற ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் உலக அளவில் பல இடங்களில் வெளிவருகின்றது.
குறிப்பாக அமெரிக்காவில் சுமார் 1100 ஸ்கிரீன்களில் இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4d தொழில்நுட்பத்தில், திரையரங்குகளில் வெளியாகும் முதல் தென்னிந்திய திரைப்படம் பொன்னின் செல்வன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொன்னின் செல்வன் படக்குழுவினர், இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு சென்று படத்திற்கான பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கார்த்தியிடம் “உங்கள் அண்ணன் Rolex எங்கே இருக்கிறார்”, என்று கேட்டபொழுது ரோலக்ஸ் சார் கொடைக்கானலில் இருக்கிறார் என்று அவர் கூறினார்.
தற்பொழுது “கங்குவா” படத்தினுடைய படபிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. கங்குவா திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் மிகப்பெரிய பட்ஜெட்டிலான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் தற்காலத்தில் நடைபெறும் கதையும், பழங்காலத்தில் நடைபெறும் கதையும் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்க, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்து வருகின்றார்.