Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில்

Krubhasamudra-Perumal-Temple-Tiruvarur2

ஆன்மிகம்

அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில்

ஊர்: திருச்சிறுபுலியூர்

மாவட்டம்: திருவாரூர்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : அருமாகடலமுதன்

உற்சவர்: கிருபாசமுத்திரப்பெருமாள், தயாநாயகி

தாயார் : திருமாமகள் நாச்சியார்

ஸ்தலவிருட்சம்: வில்வ மரம்

தீர்த்தம்: மானச தீர்த்தம்,திருவனந்த தீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள்: சித்திரை பிறப்பு, வைகாசி பிரமோட்சவம், ஆடிப்பெருக்கு,நவராத்திரி பவித்ரா உற்சவம், ஐப்பசி மூலத்தில் மணவாள மாமுனிகள் உற்சவம், வைகுண்ட ஏகாதசி, மாசி சுக்லபட்ச ஏகாதசி, பங்குனி உத்திரம்.

திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 12:00மணி வரை, மாலை 5:30மணி முதல் இரவு 8:00மணி வரை.

Krubhasamudra Perumal Temple, Tiruvarur

தல வரலாறு

ஒரு சமயம் கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும் பகை உண்டானது. பகை நீங்க ஆதிசேஷன் பெருமாளை நினைத்து தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று ஆதிசேஷனுக்கு குழந்தை வடிவில் சயன கோலத்தில் காட்சி கொடுத்தார்.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 24 வது திவ்ய தேசம் 108 திருப்பதிகளில் இரண்டு தளங்கள் மட்டுமே தெற்கு நோக்கி அமையப் பெற்றவை. அதில் முதல் தலமான ஸ்ரீரங்கமும் 11வது தலமான திருச்சிறுபுலியூர்மே ஆகும். வியாக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரம் நடராஜரிடம் தவமிருந்து முக்தி வேண்டினார்.

Krubhasamudra Perumal Temple, Tiruvarur

சிவபெருமானும் வேண்டுதளுக்கிணங்கி, சிறுபுலியூர் சென்று அங்குள்ள பெருமானை வணங்க முக்தி கிடைக்கும் என அருளினார். அவ்வாறு பெருமாளும் அவர் பக்தி கிணங்க முக்தி கொடுத்தார். நடராஜரை வணங்கிய வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மூலஸ்தானத்தில் உள்ளனர். இத்தலத்தில் ஆதிசேஷனுக்கு தனி சன்னதி உள்ளது. தீராத நோய் மன நல பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்புபலன் உண்டாகும்.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top