அந்த Cute ஜோடி மீண்டும் இணைகிறது : நயன்தாரா 75ன் சூப்பர் அப்டேட் வெளியானது

மலையாள மொழியில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் நடிகையாக மாறி இன்று “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற அந்தசத்திற்கு உயர்ந்துள்ளவர் தான் நயன்தாரா. மலையாளத்தில் 2003 மட்டும் 2004ம் ஆண்டு ஒரு சில
படங்களில் நடித்த அவர் முதன் முதலில் தமிழில் நடித்த திரைப்படம் ஐயா.
இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், அடுத்த படத்தில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்தார். சந்திரமுகி படத்தில் துர்கா என்று கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்திருந்தார் நயன்தாரா.
தொடர்ச்சியாக சூர்யா, தளபதி விஜய் மற்றும் தல அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர, தற்போது சுமார் 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கிறார் நயன். தற்பொழுது தனது 75வது திரைப்படத்தில் நடிக்க உள்ள நயன்தாரா இந்த ஆண்டு வெளியாகவுள்ள ஷாருகானின் ஜவான் படத்திலும் நடித்துவருகிறார்.
நயன்தாராவின் 75வது திரைப்படத்தை கிருஷ்ணா இயக்க, சத்யராஜ் இந்த படத்தில் இணைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 10 ஆண்டுகள் கழித்து நடிகர் ஜெய் இந்த படத்தில் நயன்தாராவுடன் நடிக்கவுள்ளார்.