இது நெசம்தானா?.. ஹீரோக்களாக களமிறங்கும் லோகேஷ் மற்றும் அனிரூத்!

இன்றைய தேதியில் சூப்பர் ஹிட் இயக்குநர் யாரென்றால், நிச்சயம் லோகேஷ் கனகராஜ் அவர்களின் பெயர் தான் அதிகமாக கேட்கும். அதேபோல பல ஹிட் படங்களை கொடுக்கும் இசையமைப்பாளர் யாரென்றால் நிச்சயம் ராக்ஸ்டார் அனிரூத் என்று கூறுவார்கள்.
இவர்கள் தனித் தனியாக படங்களில் நடித்துள்ளனர், ஆனால் இவர்கள் ஹீரோவாக அதிலும் ஒரே படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்?. நம்ப முடியவில்லை என்றாலும் கோலிவுட் வட்டாரங்கள் அப்படித்தான் முணுமுணுக்கின்றது.
அய்யா சமுத்திரக்கனி வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் இதுகுறித்து கூறியுள்ளார், ஆனால் அவர் வாழ்த்துக்களை மட்டுமே கூறியுள்ளாரே அன்றி லோகேஷ் மற்றும் அனிரூத் ஹீரோக்களாக நடிப்பதாக கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரி வெளியான தகவலை சொல்கிறேன் கேளுங்கள், பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவு இயக்கத்தில் இவர்கள் இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை.