எந்த நேரமும் ஏசியில் இருப்பது ஆபத்தா?

எந்த நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகிறது. ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் சைனஸ், மூக்கடைப்பு, தலைவலி, காது அடைப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகும். சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந் தால் நோய் இன்னும் தீவிரமடையும்.

இந்த வைட்டமின் கருவுறு தலில் ஆரம்பித்து, இதயம் நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனம் அடையும். மூட்டு வலி, முதுகு வலி போன்ற வியாதிகள் எளிதாக வரும். சிலருக்கு ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் கூட ஏற்படலாம்.

நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் சரும வறட்சி பிரச்சினையை அதிகம் எதிர் கொள்ள நேரிடும். ஏசியை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்துபவர்களுக்கு பாக்டீரியா, தொற்று நோய்கள் ஏற்படும். ஆகவே ஏசியை சுத்தம் செய்வது அவசியம். அதிக நேரம் ஏசியில் அமர்வதை தவிர்ப்பது நல்லது.

Advertisement