மகிழம்பூவின் மருத்துவ குணங்கள்

மகிழம்பூக்களில் அதிக மருத்துவ குணங்களும் நல்ல மணமும் கொண்டது. இந்த பூவிலிருந்து வாசனைத் திரவியங்கள் தயாரிக்கபடுகிறது. இதன் கனிகள் மஞ்சள் நிறத்தில் முட்டை வடிவத்தில் இருக்கும்.

பூவின் நறுமணத்திற்காகவே பூங்காக்கள், வீடுகள் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படுகிறது. மகிழம்பூ சிவனுக்கு உரியது என்பதால் பெரும்பாலும் இது சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும்.

மகிழம்பூவின் மருத்துவ குணங்கள் என்ன?

இந்த மகிழம் பூவின் வாசனை தலைவலி, தலைபாரம், கண்நோய் போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும் சக்தி மகிழம்பூவிற்கு உள்ளது.

இந்த பூவின் வாசனை ஆண்களுக்கும் பெண்களுக்கும் காம உணர்வை தூண்டிவிடும் இயற்கை வயாகராவாக செயல்படுகிறது.

மகிழம் விதைகளை காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு வலிமை சேர்க்கும். இதனை அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும்.

10 கிராம் மகிழம் பட்டையை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மில்லியாக காய்ச்சி தேன் கலந்து தினமும் காலையிலும் மாலையிலும் 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் கருப்பை பலவீனம் தீரும்.

மகிழம் பூவை காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலையிலும் மாலையிலும் குடித்து வந்தால் தலைவலி, உடல் வலி, கழுத்து வலி ஆகியவை நீங்கும்.

மகிழம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை மூக்கில் உறிஞ்சினால் தலையில் கோர்த்து கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலைபாரம் நீங்கும்.

Recent Post