ஊர் -தென்திருப்பேரை
மாவட்டம் -தூத்துக்குடி
மாநிலம் -தமிழ்நாடு
மூலவர் -மகரநெடுங்குழைக்காதர்
தாயார் -குழைக்காது வல்லி நாச்சியார் ,திருப்பேரை நாச்சியார்
தீர்த்தம் -சுக்ர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
திருவிழா –வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம் -காலை 7:30 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 7:30 மணி வரை
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 88 வது திவ்ய தேசம்.
தல வரலாறு:
இத்தலத்தில் உள்ள ஆலயம் மிகப்பெரியதாகும் . பூதேவி துர்வாசர் உபதேசித்த அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து தவம் செய்த போது பின் தாமிரபரணியில் மூழ்கி எழும்போது இரண்டு பெரிய குண்டலங்களைப் பெற்றார் .ஸ்ரீ பேரை என்ற திருநாமம் பெற்றாள்.
பங்குனி பவுர்ணமியில் தாமிரபரணியில் பெற்ற மீன் வடிவமுள்ள 2 குண்டலங்களை பெருமாளுக்கு சமர்பிக்க பகவான் மகரநெடுங்குழைக்காதன் என்ற திருநாமம் பெற்றார். பூமிதேவி ஸ்ரீ பேரை என்ற நாமம் பெற்றதால் இத்தலத்திற்கு திருப்பேரை என்ற பெயர் ஏற்பட்டது. வருணன் குருவை நிந்தனை செய்ததால் பாவம் உண்டாயிற்று ,அது விலக பங்குனி பவுர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து பாவம் விலகி நன்மை அடைந்ததாகவும் பகவானை பூஜித்து பாவம் விலகவே மழை பெய்ததாக தல வரலாறு கூறுகிறது.
நவ திருப்பதிகளில் இது ஆறாவது திருப்பதி(தென்திருப்பேரை). நவகிரகங்களில் இது சுக்கிரன் தலம். சுக்கிர கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலக இத்தலத்தில் வழிபாடு செய்தால் தோஷ நிவர்த்தி ஏற்படும் என சொல்லப்படுகிறது .இத்தலத்தில் பெருமாளே சுக்கிர கிரகமாக அருள்புரிகிறார்.