இது எங்க குட்டி வீடு.. மணிமேகலை ஹுசைன் ஜோடி வெளியிட்ட Cute புகைப்படம்

தொகுப்பாளினி மணிமேகலை, தமிழ் மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றவர் இவர். சிறு சிறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர். தற்பொழுது ஒரு முன்னணி சேனலில் ஸ்டார் தொகுப்பாளராக உள்ளார்.
தனது காதலரான ஹுசைன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். ஹுசைன் திரைப்படங்களில் நடன இயக்குநராக உள்ளார், திருமணமான அன்று முதல் இன்று வரை இருவரும் அன்னோன்யமாக நல்ல முறையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர்.
சின்னத்திரையில் குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்ற பொழுதும் தங்களுக்கென்று தனி சமூக வலைதளங்களை தொடங்கி அதிலும் பல சுவாரசியமான விஷயங்களை செய்து இந்த ஜோடி நல்ல முறையில் வளர்ந்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தாங்கள் வாங்கிய நிலத்தில், சொந்தமாக வீடு கட்டும் பணியை தொடங்கினார்கள் இந்த ஜோடி. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்த நிலையில் அவர்கள் புதிதாக கட்டி வரும் வீடு உள்ள நிலத்தில் தனியாக சின்னதொரு தார்பாய் அமைத்து அதன் கீழ் அமர்ந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.