மாஸ்டர் திரை விமர்சனம்

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் செம ஹிட் அடித்தது. கொரோனா ஊரடங்கு பிறகு திரையில் வரும் மிகப் பெரிய படம் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ், நாசர், ரமேஷ் திலக் என பல பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

master thirai vimarsanam

ஒரு கல்லூரியில் இளம் பேராசிரியராக விஜய் பணியில் சேருகிறார். இப்படத்தில் விஜயின் பெயர் ஜே.டி என்னும் ஜான் துரைராஜ். இவர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார். இவர் பணிபுரியும் கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சனையால் அங்கிருந்து வெளியேறுகிறார். அதன் பிறகு சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வாத்தியாராக நியமிக்கப்படுகிறார்.

அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளியை பவானி என்கிற விஜய்சேதுபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அங்கு உள்ள சிறுவர்களை தனது சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துகிறார் விஜய் சேதுபதி. இதனை விஜய் எதிர்க்கிறார். இதனால் இருவருக்கும் நடக்கும் மோதலே படத்தின் மீதிக்கதை.

படத்தில் விஜய் ஒரு மாஸான புதுமையான நடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி கொடூரமான வில்லனாக மிரட்டியிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக அர்ஜுன் தாஸும் நடிப்பில் மிரட்டியுள்ளார்.

விஜய், விஜய் சேதுபதி என இரண்டு மாஸ் ஹீரோக்களை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திறமையாக இயக்கியுள்ளார். சில இடங்களில் சில காட்சிகள் விஜய் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் மகேந்திரன், சாந்தனு, கவுரி கிஷான், தீனா, ஆண்ட்ரியா, விஜே ரம்யா ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அனிருத்தின் பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. பாடல்கள் உருவாக்கிய விதம் நன்றாக உள்ளது. விஜய், விஜய் சேதுபதி மோதும் சண்டை காட்சிகள் மாஸாக உள்ளது.