மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு..? ஷாக்கிங் தகவல்..!

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும், முடிந்த அளவிற்கு தமிழக அரசும், சுகாதாரத்துறையும், காவலர்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நேற்று வரை மதுரையில் 705 பேரும், திருவண்ணாமலையில் 1,060 பேரும், வேலூரில் 477 பேரும், ராணிப்பேட்டையில் 470 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.