இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் பசலைக்கீரை சூப்

பசலைக்கீரையில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது. முடி வளர்ச்சி முதல் இரத்த உற்பத்தி வரை பல விஷயங்களுக்கு இவை அரு மருந்தாகிறது. உடல் கழிவுகளை வெளியேற்றி வயிற்றுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்றில் இருக்கும் புண்களை குணபடுத்தும்.

பசலைக் கீரையில் சூப் செய்வது எப்படி? அதில் உள்ள நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

Advertisement

தேவையான பொருள்கள்

பசலைக் கீரை – ஒரு கட்டு

உளுந்து (வறுத்தது) – ஒரு ஸ்பூன்

தக்காளி – 2

வெங்காயம் – ஒன்று

பூண்டு – 10 பல்

இஞ்சி – ஒரு துண்டு

கொத்தமல்லி – ஒரு கைப்பிடி

புதினா – ஒரு கைப்பிடி

மிளகு – அரை ஸ்பூன்

சீரசும் – அரை ஸ்பூன்

உப்பு, மஞ்சள், எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பசலைக் கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு, வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம், மஞ்சள், உளுந்து ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.

கடைசியாக, கீரையையும் போட்டு வதக்கி, ஆறு டம்ளர் நீர் சேர்த்து பாதியாகச் சுண்டச் செய்து, தேவையான அளவு உப்புச் சேர்த்து இறக்கவும்.

பலவகையான உடல் நோய்களை நீக்கி உடலுக்கு வலு சேர்க்கும் சூப் இது. நாள்பட்ட நோய்களால் அவதிப் படுபவர்களுக்கு அமுதம் போன்றது இந்த சூப்.