Search
Search

வாதத்தை போக்க பஸ்சிமோத்தானாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன

benefits of paschimottanasana

சிறுநீரகங்களை சரிவர செயல்பட வைக்கும் ஆசனம் பஸ்சிமோத்தாசனம் ஆகும். நீரழிவு நோய் வராமல் தடுக்கும்.   பஸ்சிமோத்தாசனம் செயல்முறை  சித்திரக கம்பளத்தில் மல்லாந்து படுக்கவும்.   சுவாசத்தை இழுத்தவாறு இரு கைகளையும் முன்னால் கொண்டு வரவும். சுவாசத்தை வெளியிட்டவாறு இடுப்புக்கு மேல் உள்ள உடலை கிளப்பி கால்களின் மேல் குனியவும்.  

இப்பொழுது இரு புஜங்களும் காதுகளை ஒட்டிக் கொண்டிருக்கும்   கால்கள் சித்திரக் கம்பளத்தை ஒட்டியபடியே இருக்க வேண்டும்   இரு கைகளின் கட்டைவிரல், ஆளகாட்டி விரல்களை வளையம் போல் செய்து கால் கட்டைவிரல்களில் கொக்கி போல் மாட்டி இழுக்கவும்.  

தலையை முழங்கால்களுக்குள் புதைத்து மூட்டுக்களை மடக்காமல் மூட்டுக்களை மூக்கால் தொடவும்.   இந்நிலையில் மூன்று வினாடிகள் நிலைத்து சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விட்டுக் கொள்ளலாம்.   இந்த நிலையே பஸ்சிமோத்தானாசனம் எனப்படும். பின்னர் சுவாசத்தை உள்ளிழுத்தவாறு மெதுவாக படுக்கும் நிலைக்கு வரவும்.  

பஸ்சிமோத்தாசனத்தின் பலன்கள்

  • முதுகொலும்பு, இடுப்பு, குடல், கால் நரம்புகள் வலுவடையும்.
  • தொந்தியை கரைக்கும்
  • வயிறு சம்பந்தமான நோய்களை அகற்றும்
  • வாதத்தை போக்கும்
  • உடம்பை இரும்பாக்கும்

மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

You May Also Like