Search
Search

சொதப்பியதா பத்து தல?? முழு விமர்சனம் இதோ

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பத்து தல. கன்னடத்தில் 2017ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற முஃப்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல திரைப்படம்.

படத்தின் கதை

கன்னியாகுமரியில் மணல் கொள்ளையில் ஈடுபடும் மிகப்பெரிய தாதாவாக இருந்து வருகிறார் சிம்பு. இன்னொரு புறம் முதல்வர் சந்தோஷ் பிரதாப் திடீரென காணாமல் போகிறார். அவரைக் கடத்தியது யார் என சிபிஐ தேடி வருகிறது. இதனிடையே கவுதம் கார்த்திக், சிம்புவிடம் வேலைக்கு சேர்கிறார். கவுதம் கார்த்திக் ஒரு போலீஸ் அதிகாரி என சிம்புவுக்கு தெரிய வருகிறது.

இறுதியில் சிம்புவை கவுதம் கார்த்திக் பிடித்தாரா ? காணாமல் போன முதல்வர் என்ன ஆனார் என்பதே படத்தின் மீதிக்கதை.

ஏஜிஆர் கதாப்பாத்திரத்தில் வரும் சிம்பு நடிப்பின் மூலம் படத்தை தாங்கி பிடிக்கிறார். படத்தின் முதல் பாதியில் ஒரு சில இடத்தில் மட்டுமே சிம்பு வருகிறார். இடைவேளைக்குப் பின் மட்டுமே அவருடைய ராஜ்ஜியம் தொடர்கிறது.

‘அன்டர்கவர் போலீஸ்’ கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக். அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்துள்ளார். பிரியா பவானி சங்கர். சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார்.

ஏஆர் ரஹ்மான் இசையில் சாயிஷா ஆடியுள்ள ‘ராவடி’ பாடல் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. மற்றபடி பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார். திரைக்கதை அழுத்தமாகவும், விறுவிறுப்பாகவும் நகராதது ஒரு குறை.

மொத்தத்தில் பத்து தல – விறுவிறுப்பு பத்தல

You May Also Like