பயணிகள் கவனிக்கவும் – திரை விமர்சனம்

மலையாளத்தில் 2019 ம் ஆண்டு ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தின் ரீமேக் தான் ‘பயணிகள் கவனிக்கவும்’ படம்.

இப்படத்தில் விதார்த், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சக்திவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ‘ஆஹா’ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது.

Payanigal Kavanikkavum movie review

விதார்த் மற்றும் லட்சுமி காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளியாக உள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

மறுபுறம் துபாயில் வேலை பார்க்கும் கருணாகரன் திருமணத்துக்காக சென்னை வருகிறார்.அப்போது மெட்ரோ ரயிலில் விதார்த் தூங்குவதை குடிபோதையில் தூங்குகிறார் என்று நினைத்து கருணாகரன் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்கில் பதிவிட அது வைரல் ஆகி விடுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விதார்த் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவதற்கு சட்டத்தின் உதவியை நாடுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

வாய் பேச முடியாத மாற்று திறனாளியாக நடித்திருக்கும் விதார்த் நடிப்பில் அசத்துகிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் லஷ்மி ப்ரியா அவரும் நன்றாக நடித்துள்ளார்.

கருணாகரனின் நண்பராக வரும் சத்யன் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். காவல் அதிகாரியாக வரும் பிரேம், வீட்டு உரிமையாளராக வரும் கவிதாலாயா கிருஷணன் என அவைவரின் நடிப்பு சிறப்பு.

சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான தகவல்களால் எப்படி பிறருக்கு அவப்பெயரை உண்டாக்குகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சக்திவேல்.

திரைக்கதை மெதுவாக சென்றாலும் படம் சொல்ல வரும் மெசேஜ் எல்லாவற்றையும் ரசிக்க வைக்கிறது. பாண்டி குமார் ஒளிப்பதிவும் ஷாம்நாத் நாக்கின் இசையும் படத்துக்கு வலு சேர்க்கிறது.

மொத்தத்தில் ‘பயணிகள் கவனிக்கவும்’ – அனைவரும் கவனிக்க வேண்டிய படம்