வாரிசு படத்தை முந்திய PS 2..முதல் நாள் வசூலே இத்தனை கோடியா??

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் நேற்று வெளியானது. இரண்டாவது பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் வெளியான நேற்று முதல் நாளில் 38 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.26.5 கோடி வசூலித்தது. இந்த சாதனையை பொன்னியின் செல்வன் 2 முறியடித்துள்ளது.