தென்னிந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதுமை.. 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகும் PS-2

கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் கதையை தழுவி எடுக்கப்பட்டு தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் பாகம் 1. மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி உலகெங்கிலும் வெளியாக உள்ளது.
இதுவரை தமிழில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய படங்களில் பொன்னின் செல்வன் திரைப்படம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து நடித்த ஒரு திரைப்படமாகும் இது உள்ளது.இந்நிலையில் நேற்று லைக்கா நிறுவனம் கூடுதலாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது தென்னிந்திய திரைப்படங்களின் வரலாற்றில் முதன் முதலில் 4dx தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கும் முதல் திரைப்படம் பொன்னியின் செல்வன் 2 என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே மக்கள் அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள 4DX தொழில்நுட்ப வசதி கொண்ட திரையரங்குகளில் இந்த படத்தை காணலாம்.
4DX என்பது முப்பரிமாண கட்சிக்கு அடுத்து உள்ள நிலை, அதாவது படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் இருக்கை அதிர்வுகளை ஏற்படுத்தும். மேலும் பனி, குளிர் போன்ற பருவநிலை மாற்றங்களை பார்வையாளர்கள் உணரும் அளவிற்கு சில ஏற்பாடுகளும் இதில் செய்யப்பட்டிருக்கும்.